Beast Movie Cast Update
தளபதி விஜய் முதன்முறையாக நெல்சன் திலீப்குமாருடன் இணைந்து நடிக்கும் தளபதி65 படத்துக்கு அண்மையில் தான் பீஸ்ட் என்கிற தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில், நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக அறிவிக்கப்பட்டார். மேலும், மனோஜ் பரமஹம்சா இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றுவார் என்கிற தகவலை அவரே பகிர்ந்திருந்தார். தவிர பீஸ்ட் ஒரு பான்-இந்தியா திரைப்படமாக இருக்கும் என்பதையும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் பீஸ்ட் படத்தில் நடிக்கும் நடிகர்கள் விபரங்களை சன் பிக்சர்ஸ் பிரத்தியேகமாக வெளியிட்டு வருகிறது. அதன்படி பிரபல இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
23 வருடங்கள் திரைப்பட இயக்குநராக இருந்த பிறகு, சமீபத்தில்,செல்வராகவன் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'சாணிக் காயிதம்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகும் செல்வராகவன். இப்போது விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் நடிக்கிறார்.
இதேபோல், யோகி பாபு, விடிவி கணேஷ், லில்லிபுட் ஃபாரூக்கி, ஷைன்டாம் சாகோ, அபர்ண தாஸ் அங்குர் அஜித்விகல் ஆகியோர் பீஸ்ட் படத்தில் நடிகர்களாக இணைவதாக சன் பிக்சர்ஸ் அடுத்தடுத்து அறிவித்து பட்டையை கிளப்பி வருகிறது.
இந்நிலையில், இப்படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி ‘பீஸ்ட்’ படத்தில் 3 வில்லன்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஒருவராக மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ நடித்து வருவதாகவும், கூறப்படுகிறது.
காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.





Post a Comment